வீடுகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வெள்ள நிலைமை மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் மீண்டும் நிர்மாணிக்கத் தேவையான வேலைத் திட்டங்களை விரைவாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட சந்திப்பொன்றின் போதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகள், பாடசாலைகள், மின் விநியோகம் மற்றும் சுகாதார நிறுவனங்கள் போன்ற அனைத்துத் தரவுகள் குறித்த அறிக்கையையும் விரைவில் தனக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளுக்கு வெளியில் இடங்களைத் தெரிவு செய்யுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.