
கொழும்பு, மார்ச் 09
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கல்கிஸை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் மரணித்துள்ளார்.
கரலியத்த, தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்