சீன தூதுவரை சந்தித்தார் சபாநாயகர்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, மார்ச் 08

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும், இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங்க்கும் இடையில் விசேட சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கொரோனா சவாலான காலக்கட்டத்தில் இலங்கைக்கு சீன அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கும் உதவிகளுக்கும் சபாநாயகர் தனது நன்றியை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

Trending Posts