இந்திய மாணவர்கள் வேறு யாராவது உக்ரைன் படையில் இணைந்தனரா? வெளியுறவு துறை தீவிர விசாரணை

செய்திகள் முக்கிய செய்திகள் 3

இந்தியா, மார்ச் 10

உக்ரைனுக்கு கல்விக்காக சென்று அந்நாட்டு இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழக மாணவர் சாய்நிகேஷ் போல் இந்திய மாணவர்கள் வேறு யாராவது உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்து உள்ளார்களா என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்த தமிழக மாணவர் கசாய்நிகேஷ் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்று உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோரிடம் உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர்.

உக்ரைனிலுள்ள பதற்றமான சூழல் காரணமாக வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் நாடுகளுக்கு செல்ல தொடங்கினர். இதுபோல் சாய்நிகேசையும் ஊருக்கு வந்து விடுமாறு பெற்றோர் அழைத்தனர்.

அப்போது அவர், துணை இராணுவ பிரிவில் சேர்ந்துவிட்டதாகவும்,ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருவதாகவும் கூறி உள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பெற்றோர், மகனை மீட்டு தர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக சாய்நிகேஷின் பெற்றோரிடம் விசாரித்தனர். சாய்நிகேஷ் போல் இந்திய மாணவர்கள் வேறு யாராவது உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்து உள்ளார்களா? என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending Posts