உக்ரைனுக்கு உதவிகளை வழங்கும் சீனா

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

சீனா, மார்ச் 10

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா நடுநிலை நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.

மேலும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண இருதரப்பையும் சீனா வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த நாட்டுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில்,

உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் உள்பட 50 லட்சம் யுவான் மதிப்பிலான நிவாரண பொருட்கள் உக்ரைனுக்கு வழக்கப்படுகிறது. இதன் முதல் தொகுதி இன்று பீஜிங்கில் இருந்து உக்ரைனுக்கு அனுப்பப்பட்டன. மீதமுள்ளவை தகுந்த வழிகளில் உக்ரைன் செஞ்சிலுவை சங்கத்திடம் வழங்கப்படும் என்றார்.

Trending Posts