726 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செய்திகள்

மண்சரிவு ஏற்படலாமென சந்தேகிக்கப்படுகின்ற 726 இடங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்திலேயே மண்சரிவு அபாயம் அதிகளவில் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவு தலைவர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளதுடன், மண்சரிவு அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து பகுதிகளையும் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அபாயம் நிலவும் இடங்களை அண்மித்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள், அந்த இடங்களிலிருந்து விரைவாக வெளியேற வேண்டும் எனவும் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாதத்றை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட முடியும் என்பதுடன், கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாகவும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.