எதிர்வரும் ஆண்டு முதல் ஓய்வுபெறவுள்ள அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு, தீர்வைவரி முறையில் வழங்கப்படும் வாகனங்களுக்கான நிதித் தொகை அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் தரத்திலுள்ள சிரேஷ்ட அதிகரிகளுக்கு தீர்வைவரி முறையில் வாகனங்களை பெற்றுக் கொடுப்பதற்காக 30,000 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிதித் தொகை 45,000 அமெரிக்க டொலர் வரையும், இரண்டாம் தரத்திலுள்ள அதிகரிகளுக்கு 27,000 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிதித் தொகை, 40,000 அமெரிக்க டொலர் வரையும், மூன்றாம் தரத்திலுள்ள அதிகரிகளுக்கு 27,000 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிதித் தொகை 35,000 அமெரிக்க டொலர் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.