மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான சிலிண்டர்கள் பறிமுதல்

செய்திகள்

ஹம்பாந்தோட்டை, மார்ச் 16

ஹம்பாந்தோட்டை -  அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே இடத்தில் வைத்து மக்களுக்கு அவை விற்பனை செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இதேவேளை சில எரிபொருள் நிரப்பகங்களில் எரிபொருள் இல்லை என்று கூறி ஒரு சில தரப்புகளுக்கு மாத்திரம் இரகசியமான முறையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளார்கள்.  அது பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.