ஒவ்வொரு இரவும் மிகப் பயங்கரம்: உக்ரைன் ஜனாதிபதி

உலகச் செய்திகள் முக்கிய செய்திகள் 3

உக்ரைன், மார்ச் 16

இன்று 21 ஆவது நாளாகவும் தொடரும் யுத்தத்தின் மத்தியில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, கனடாவிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ” ஒவ்வொரு இரவுகளும் மிகவும் பயங்கரமானவையாகக் கடந்து செல்கின்றன.

ஐக்கிய நாடுகளின் தரவுகள் அடிப்படையில் 97 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் இதுவரை மரணித்தனர். இந்த யுத்தம் உங்களின் ஊர்களில் நடைபெற்றால் எப்படியிருக்கும் என்பதை உணர்ந்து பாருங்கள். எங்களிற்கு அதிகமான உதவிகள் ஏதும் தேவையில்லை. எங்களுக்கு நீதி வேண்டும். எங்களுக்கு உண்மையான ஆதரவு தேவை.

தயவு செய்து விமான எதிர்ப்பு மண்டலத்தை உக்ரைன் மீது பரவச் செய்யுங்கள்” என உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள நிலையில் மேற்படி கோரிக்கை கனடா பாராளுமன்றிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் உக்ரைனுக்கு சாதகமான முடிவுகள் சில எட்டப்பட்டதாகவும் மேலும் சில இறுக்கமான தடைகளை ரஷ்யா மீது விதிப்பதற்கு கனடா தயாராகி வருவதாகவும் மனிதாபிமான உதவிகள் சிலவற்றை உக்ரைனுக்கு வழங்க கனடா பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விமான எதிர்ப்பு மண்டலத்திற்கான ஒப்பதல் இன்னும் பெறப்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.