
கொழும்பு, மார்ச் 16
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து கொழும்பில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
மக்கள் தற்போது யாசகம் வாங்கும் நிலைக்கு வந்துள்ளதை எடுத்துக்காட்டும் விதமாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உறுப்பினர் ஈசன் யாசகம் வாங்கும் நூதனப் போராட்டமொன்றை முன்னெடுத்தார்.