கிளிநொச்சியில் மரம் வீழ்ந்து இரு கடைகள் சேதம்

முக்கிய செய்திகள் 1

கிளிநொச்சி நகரத்தின் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை ஒரு மணியளவில் பாரிய வேப்பமரம் ஒன்று பாறி விழுந்ததில் வர்த்தக நிலையம் ஒன்று உட்பட இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளதுடன், கடையில் உறங்கிக் கொண்டிருந்தவர் காயங்களுக்கு உள்ளாகி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

ஏ-09 வீதியின் புனித திரேசம்மாள் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையத்துக்கு அருகில் நின்ற பாரிய வேப்பமரம் இன்றையதினம் அதிகாலை ஒரு மணி அளவில் விழுந்துள்ளது.

இதன்போது, கடையில் உறங்கிக் கொண்டிருந்தவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகி தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் கடையின் கூரைகள் சேதமடைந்துள்ளது.