அர்ஜென்டினாவுக்கு புதிய ஜனாதிபதி

முக்கிய செய்திகள் 3

அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே (Javier Milei) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி அவர் கிட்டத்தட்ட 56% வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வலதுசாரி நவதாராளவாத அரசியல் பின்னணி கொண்ட ஜேவியர் மிலேயின் போட்டியாளரான செர்ஜியோ மாஸா 44% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மீள் கணக்கீடு செய்ய வேண்டும் என போட்டி வேட்பாளரின் ஆதரவாளர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.