இலங்கை வந்துள்ள “செலிப்ரிட்டி எட்ஜ்”

முக்கிய செய்திகள் 2

“செலிப்ரிட்டி எட்ஜ்” (Celebrity Edge) என்ற சொகுசு பயணிகள் கப்பலொன்று ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தடைந்துள்ளது.

இந்தியாவின் கொச்சின் துறைமுகத்திலிருந்து குறித்த சொகுசுக் கப்பல் வருகை தந்துள்ளது.

306 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் 15 தளங்களைக் கொண்டடன் நவீன வசதிகளை உள்ளடக்கியது.

இந்தக் கப்பலில் 2,780 பயணிகளும் 1,273 பணியாளர்களும் வருகைதந்துள்ளனர்.

இந்த கப்பலில் வருகைந்துள்ள பயணிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.