புத்தக கடைக்குள் கத்திக்குத்து: இருவர் காயம்

முக்கிய செய்திகள் 1

புத்தக விற்பனை நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வாள் போன்ற கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கடையின் உரிமையாளர் உட்பட இருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மாம்புல்கொட பிரதேசத்தில் இயங்கிவரும் புத்தக விற்பனை நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புத்தகக் கடையின் உரிமையாளர் அந்த இடத்தில் இருந்தபோது, ​​திடீரென வந்த இனந்தெரியாத நபர் அவர் மறைத்து வைத்திருந்த வாள் போன்ற கூரிய ஆயுதத்தை எடுத்து கடையின் உரிமையாளரைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை சமரசம் செய்த அயலவர், கூரிய ஆயுதம் தாக்கியதில் கழுத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் கடையின் உரிமையாளர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.