தொம்பேயில் முச்சக்கரவண்டி மோதி ஒருவர் பலி

முக்கிய செய்திகள் 1

தொம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெமாலகம கட்டுலந்த வீதியில் தெமாலகம பிரதேசத்தில் இருந்து கட்டுலந்த பிரதேசத்தை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெமாலகம பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய நபராவார்.

காயமடைந்தவர் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.