ரயில் மிதிபலகையில் பயணித்த நால்வர் சுவரில் மோதப்பட்டதில் காயம்!

முக்கிய செய்திகள் 1

ரயிலின் மிதிபலகையில் பயணித்துக் கொண்டிருந்தந நால்வர் கொழும்பு கொம்பனித் தெரு ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள சுவரில் மோதப்பட்டுக் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.

குறித்த ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

காயமடைந்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.