மண்சரிவு அபாயம் – 22 குடும்பங்கள் வெளியேற்றம்

முக்கிய செய்திகள் 2

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் உள்ளதால் ஹப்புத்தளை பிரதேச செயலகப் பிரிவின் தங்கமலையில் உள்ள க்லேனோர் (Glanor) தோட்டத்தில் இருந்து 32 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பிரதேச செயலாளர் கயானி கே ரணதுங்க தெரிவித்தார்.

இப்பகுதியில் நடத்தப்பட்ட நிலப்பரிசோதனையின் போது நீர் ஓடைகள் தோன்றி நிலம் சரிந்து வருவதை அவதானித்து மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டதால் உடனடியாக அங்கு இருக்கும் குடும்பங்களை வெளியேற்ற தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Trending Posts