இந்தியாவின் தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடியதை ஏற்றுக்கொள்ள முடியாது – இராஜாங்க அமைச்சர்

முக்கிய செய்திகள் 2

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலிய அணி வென்றதற்கு இலங்கை பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடியதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் என்ற வகையில் நாம் அனைவரும், உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கே ஆதரவு வழங்கியிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுக்களால் நேற்று வீழ்த்தியது.

இதனை இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியிருந்தனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த வேளையில், அண்டைய நாடு என்ற வகையில் எமக்கு அனைத்து விதமான உதவிகளையும் இந்தியா வழங்கியது.

அத்துடன், அப்போது இந்தியா உதவியிருக்காவிட்டால் இலங்கை சோமாலியாவாக மாறியிருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் கூட எமக்கு பல்வேறு உதவிகளை இந்தியாவே வழங்கி வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில், இந்திய அணியின் தோல்வியை இலங்கை வாழ் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் குறிப்பிட்டுள்ளார்.