அமைச்சுப் பதவியை இராஜனாமா செய்யும் எண்ணம் இல்லை: ரொஷான் ரணசிங்க

செய்திகள் முக்கிய செய்திகள் 2

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தயாராக இல்லை என விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் சேரும் எண்ணம் இல்லை தமக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விளையாட்டுத்துறை இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுத் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

தாம் இராஜனாமா செய்வது அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் வாக்காளர்களின் ஆணைக்கு எதிரானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி விரும்பினால், அதனை செய்ய முடியும். ஜனாதிபதி ஊடகப் பிரிவும் ஜனாதிபதியும் இரண்டல்ல ஒன்றே எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிவிப்புகள் எப்போதும் ஜனாதிபதியின் கருத்தை வெளிப்படுத்துகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.