350 மில்லியன் ரூபாவை வழங்கியது அமெரிக்கா

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கடந்தவாரம் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மணிசரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 350 மில்லியன் ரூபா நிதியுதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கிஷோப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றுச் சந்தித்து இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வின் போது, கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர், தேவைப்படும் போதெல்லாம் அமெரிக்க மக்களும் இலங்கை மக்களும், எப்போதும் அருகருகே இருப்பார்களெனத் தெரிவித்துள்ளார்.