சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு மார்ச் மாதம் – நிதி இராஜாங்க அமைச்சர்

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் பின்னரே நாட்டில் மூன்றாம் தவணையை வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகர்களிடம் இருந்தும் வட் வரியை அறவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல் தமது சொந்த இலாபமாக மாற்ற சிலர் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.