
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகளின்போது உணவு சமைப்பதற்காக இலங்கை இராணுவத்தின் உதவி பெறப்பட்டுள்ளதாக இன்று (11) வெளியான ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவிக்கையில், உணவு சமைப்பதற்கு இராணுவத்தினர் அனுப்பப்பட்டதாகவும் சமையல் பொருட்களை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமையலுக்கு உதவி தேவைப்பட்டதன் அடிப்படையில் இராணுவத்தினர் அனுப்பப்பட்டதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களால் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.