![](https://i0.wp.com/www.tamilwin.lk/wp-content/uploads/2023/10/95d6d9ec-28470b4b-police2_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg?fit=640%2C346&ssl=1?v=1696217910)
புத்தளம், - பல்லம, நந்திமித்ர பாடசாலைக்கு அருகில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரிதிபென்திஎல்ல , 2 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற நேற்று (10) சிலாபம் பகுதியில் இருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிப் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.