மியான்மரில் சங்கிலித்தொடர் விபத்தில் 3 பேர் பலி

முக்கிய செய்திகள் 3

மியான்மர் தலைநகர் யாங்கூனில் இருந்து மண்டலேவுக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. மண்டலே நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே சென்ற மற்றொரு கார் மீது மோதியது. பின்னர் அடுத்தடுத்து 5 கார்கள் இந்த விபத்தில் சிக்கின.

இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த கார்களை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து அந்த காரில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். எனினும் இந்த சங்கிலித்தொடர் விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 7 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.