வாடகை வாகனங்களை பாகங்களாகப் பிரித்து விற்ற இருவர் கைது!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நிட்டம்புவ பகுதியில் வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று அவற்றை பாகங்களாகப் பிரித்து விற்பனை செய்துவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் வாகனங்கள் உடைக்கப்படுவதாக தமக்கு கிடைத்த தகவலுக்கமைய, கம்பஹா வலய மோசடி விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

அதன்போது, சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மகிழுந்து ஒன்றை பாகங்களாக பிரித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்று பாகங்களாக பிரித்து விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நெலும்தெனிய மற்றும் நயிவல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.