கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்துகொள்ள முடியும் – ஐ,தே.க.

முக்கிய செய்திகள் 2

ரணில் விக்ரமசிங்க இருக்கும்வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஜனாதிபதி ஒருவரை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என்றே ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்றனர். ஆனால் நாட்டின் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதால் பிரிந்து சென்றவர்களுக்கு மீண்டும் இணைந்துகொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை (11) யக்கல பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் கட்சியுடன் இணைந்துகொள்ள முடியாமல் இல்லை. ஏனெனில் ரணில் விக்ரமசிங்க இருக்கும்வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஜனாதிபதி ஒருவரை உருவாக்கிக்கொள்ள முடியாது என தெரிவித்தே அவர்கள் கட்சியை விட்டுச் சென்றார்கள். எவ்வாறாவது முரண்பாடு பிரிந்து ஐக்கியம் ஒன்றுபடும்போது நாங்கள் எங்களது ஜனாதிபதி ஒருவரை உருவாக்கிக்கொண்டோம்.

ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை உலக சாதனையாகும். எதிர்காலத்தில் இதுதொடர்பாக புத்தகமும் எழுதப்படும். எவ்வாறு ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ஜனாதிபதியாக முடியும் என ஆராய அது உலகில் அரசியல் செய்பவர்களுக்கு ஆய்வு புத்தகமாக இருக்கலாம்.

அத்துடன் அன்று எங்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்றிருந்தால், தப்பிச் சென்றிருக்க முடியும். என்றாரும் சரியன வெற்றி எங்கு இருக்கிறது என்பதைத் தப்பிச் சென்றவர்களுக்கு விளங்கவில்லை. அதனால் கிராமங்களில் இருக்கும் எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எங்களுடன் இணைந்துகொள்ள முடியும். 1994க்கு பின்னர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ஒருவரே இருக்கிறார். அதனால் ஐக்கிய தேசிய கட்சி எந்தளவு பலம்மிக்க கட்சி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே எங்களுக்கு பாராளுமன்றத்தில் ஒரு ஆசனமே இருந்தது. அந்த ஆசனத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவரை உருவாக்கினோம். அதனால் இதனைவிட அதிகாரம் ஒன்று இருக்கிறதா என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.