![](https://i0.wp.com/www.tamilwin.lk/wp-content/uploads/2023/10/DEATH.jpg?fit=640%2C384&ssl=1?v=1698645666)
கொஸ்கொடை - தும்மோதர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொஸ்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மரண விசாரணைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.