மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

முக்கிய செய்திகள் 2

யாழ்ப்பாணத்தில் அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, உயர்வடைந்துவந்த மரக்கறி வகைகளின் விலை 65 முதல் 70 வீதம் வரை குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் விளைவிக்கப்பட்ட கெரட், கறிமிளகாய், உருளைகிழங்கு போன்ற மரக்கறிகள் இவ்வாறு அதிகளவில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டுவரப்பபட்டுள்ளன.

அதற்கமைய, மொத்த விலையில் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கெரட் இன்று காலை 500 முதல் 600 ரூபாய் வரை குறைந்துள்ளது.

Trending Posts