
கொழும்பு, ஏப் 1
மிரிஹானவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க பிரஜைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு தீர்வு எதுவும் காணப்படாததே பெரும் ஆர்ப்பாட்டமாக வெடித்தது எனக் கூறியுள்ளார்
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் இந்த சம்பவங்களிற்கு பல தரப்பட்ட குழுக்கள்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது,ஆனால் அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும்.
அரசாங்கம்இனவாத கருத்துக்களை தவிர்த்துக்கொள்ளவேண்டும்,அதேவேளை யார் இந்த வன்முறைகளிற்கு காரணம் என்பதை வெளிப்படுத்தவேண்டும். இது இனவாத சம்பவமில்லை,இது பயங்கரவாத சம்பவமில்லை,அவ்வாறான விதத்தில் கருத்துக்களை தெரிவிப்பது ஏற்கனவே காணப்படும் நிலையை மேலும் தீவிரப்படுத்தும்.
யூப்பிளி போஸ்டில் அமைதியான விதத்திலேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் பங்கிரிமாவத்தையில் அந்த நிலை மாற்றமடைந்தது. நான் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றேன்,அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக எவரையும் காயப்படுத்தக்கூடாது-மக்களிற்கு அமைதியாகவும் சுதந்திரமாகவும் போராட உரிமையுண்டு.
பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களில் அரசியல் கட்சிகள் பங்கெடுக்ககூடாது. ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களையும்,ஆர்ப்பாட்டங்களையும்நடத்துவதற்கான உரிமையுண்டு. தாமதமாகிவிட்டபோதிலும் நாடாளுமன்றத்திற்கும்கடப்பாடு உள்ளது,பொதுமக்களிற்கு தீர்வை வழங்ககூடிய தீர்வுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்,
இந்த நெருக்கடிக்கு வன்முறைகள்இன்றி தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கின்றேன். என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்