மிரிஹானை சம்பவம் குறித்து சனத்ஜெயசூரிய கருத்து

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு, ஏப் 1

அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள்,பொதுச்சொத்துக்களிற்கு சேதம் விளைவிக்காதீர்கள், உங்கள் சகோதர சகோதரியை காயப்படுத்தாதீர்கள்,இது கலவரம் தொடர்பானது இல்லை, இது எது சரியானதோ அதற்காக குரல் கொடுப்பது என வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு அப்பாவி மக்களின் துயரங்களும் நியாயமற்ற ஒடுக்குமுறையுமே காரணம் என இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்ஜெயசூரிய சமூக ஊடக பதிவொன்றில் கூறியுள்ளார்.

மேலும் அவர்,

கடந்த ஒரு மாதத்தில் நாங்கள் இலங்கையர்கள் ஒன்றாக அமைதியாக துன்பங்களை அனுபவித்தோம். எல்லாம் மற்றும் அனைவருக்கும் ஒரு முறிவு புள்ளி உள்ளது. நாங்கள் அந்த நிலையை அடைந்துள்ளோம். நேற்றைய போராட்டங்கள் அப்பாவி மக்களின் துன்பம் மற்றும் நியாயமற்ற ஒடுக்குமுறையின் விளைவாகும்.
சாதி மதம், கட்சி அரசியல் என்ற பேதமின்றி பிரிந்து விடாமல் ஒரேயடியாக ஒன்றுபட்டு நமக்காகவும், நம் குழந்தைகளுக்காகவும், வருங்கால சந்ததியினருக்காகவும் எழுந்து நிற்போம். எனக் கூறினார்

Trending Posts