காற்றின் வேகம் அதிகரிப்பு

செய்திகள்

நாட்டின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டையில் ஊடாக பொத்துவில் வரையான கடற்கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் எனவும், நாட்டைச் சுற்றிய ஏனைய கடற்கரைப் பிரதேசங்களில், மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், மீனவர்கள் மற்றும் கடற்கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.