சாவகச்சேரியில் விபத்து – நால்வர் படுகாயம் (Photos)

செய்திகள்

யாழ்ப்பாணம், சாகவச்சேரி, தனங்கிளப்பு பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகது. காயமடைந்தவர்கள் சாகவச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக இருவர் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டையை சேர்ந்த நான்கு இளைஞர்களே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.