பல்கலைக்கழகங்களுக்கு புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அனுமதி!

முக்கிய செய்திகள் 2

பல்கலைக்கழகங்களுக்கு புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனால் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இதனை கருத்திற்கொண்டே புதிய பேராசிரியர்களை இணைத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சுமார் 6200 ஆசிரியர்கள் இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளதுடன் அவர்களில் பலர் கடந்த வருடம் நாட்டை விட்டு வெளியேறியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.