வரிச்சலுகையால் மொத்த வருவாயில் சுமார் 56 சதவீத வருமானம் இழப்பு!

முக்கிய செய்திகள் 3

கடந்த 2020ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

Verité Researchஇனால் நிர்வகிக்கப்படுகின்ற இலங்கையின் முதன்மையான பொருளாதார நுண்ணறிவு தளமான PublicFinance.lk ஆல் இந்த தகவல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2023 இன் நிதியாண்டில் குறிப்பாக ஏப்ரல் மாதம் தொடக்கம் மார்ச் வரையில் வரி வருமானமாக மொத்தமாக 978 பில்லியன் ரூபாவை ஈட்டியதாக அரசாங்கம் கடந்த 31ஆம் திகதி தெரிவித்துள்ளது.

இலங்கையின் நிதி அமைச்சினால் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட ‘வரிச் செலவின அறிக்கை’ என்ற ஆவணத்தை மூலமாகக் கொண்டே இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை வழங்கிய பல்வேறு சிறப்பு வரிச் சலுகைகள் காரணமாக இழக்கப்பட்ட மொத்த வருவாய் குறித்த அரசாங்கத்தின் மதிப்பீடுகளை இந்த ஆவணம் சுட்டிக்காட்டுகின்றது.

‘சர்வதேச சிறந்த நடைமுறைகளிற்கேட்ப இலங்கையின் நிதி அறிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சர்வதேச நாணயநிதியத்தின் அரையாண்டு திட்த்தின் அடிப்படையில் ‘முதலீட்டு வாரியம் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் சட்ட மூலம் வரி விலக்கு பெறும் அனைத்து நிறுவனங்களின் பட்டியல் மற்றும் வரி விலக்கு பெருமானத்தின் மதிப்பீடுகளை வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்த வெளிப்படுத்தளைத் தொடங்குவதற்கான கடைசித் திகதி மார்ச் 2023 ஆம் ஆண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் புதிப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இதுவரையில் சர்வதேச நாணய நிதியத்தினால் அது நிறைவேற்றப்படவில்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது.