கடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர்!

முக்கிய செய்திகள் 3

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடலில் குதித்த பெண் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (1) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

நேற்றுக் (1) காலை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் கொழும்பு - காலி முகத்திடலில் உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த பெண் ஒருவர் கம்பத்தில் ஏறிநின்று திடீரென கடலில் குதித்துள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அனைவரும் இணைந்து இந்தப் பெண்ணை காப்பாற்றி சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த பெண் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்திற்காக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் பாராட்டப்பட்டனர்.