குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்து வைப்பு: அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா,பிரசன்ன ரணதுங்க நிகழ்வில் பங்கேற்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கரைச்சி செல்வா நகர் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதிக்கான கிராம நீர் பாவனையாளர் சங்கத்தின் கூட்டம் அப் பகுதி முதியோர் சங்க கட்டிடத்தில் இன்று (2) நடைபெற்றது.

எதிர் வரும் 6 ஆம் திகதி வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசண்ண ரணதுங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்து இக் குடிநீர் தொகுதியை திறந்து வைப்பதற்கான முன் ஏற்பாடாக இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குடிநீர் விற்பனை மூலமான நிதியில் செலுத்த வேண்டிய மின்கட்டணங்கள் மற்றும் தேய்மான செலவுகளை கவனம் செலுத்தி சுத்திகரிப்பு தொகுதியை சீராக முகாமை செய்வதற்கான ஏற்பாடுகள் இச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டன.

நீர் விநியோகத்துக்காக ஒருவரை நியமித்து அவருக்கான கொடுப்பனவு மற்றும் வரவு செலவுகளை முறையாக பதிவு செய்வதன் அவசியம் நடமாடும் சேவை மூலம் விநியோகத்தை விஸ்தரிப்பதற்கான வழிவகைகளும் இங்கு ஆராயப்பட்டன.

செல்வா நகரில் செயற்பாட்டில் இருக்கும் செந்தணல் விளையாட்டு கழக இளைஞர்கள் மத்தியில் சீரான செயற்பாட்டில் இருப்பதால் குடிநீர் விநியோகத்தில் முதியோர் சங்கத்துடன் இணைந்த செயற்பாட்டை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கிளி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் அமீன் அவர்கள் இச் சந்திப்பில் வலியுறுத்தினார்.
பாடசாலை அதிபர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் முதியோர் சங்க மற்றும் செந்தணல் விளையாட்டு கழக உறுப்பினர்களும் இச் சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது