இலங்கை – பங்களாதேஷ்: நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பங்களாதேஷ் 268 ஓட்டங்கள்!

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

போட்டியில் 511 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாம் இனிங்ஸிற்காக துடுப்பாடி வரும் பங்களாதேஷ், இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

அதேநேரம், இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதேவேளை, பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த, இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களால் அவர் நாடு திரும்பியுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.