கச்சத் தீவு விவகாரம்: பா.ஜ.க பொய் கூறுவதாக அமைச்சர் பழனிவேல் தெரிவிப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 3

கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டு எடுக்கப்பொவதாக இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி தெரிவித்த விடயம் இன்று பேசு பொருளாகியுள்ளது.

தற்போது இந்தியாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தமிழகத்தின் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் கச்சதீவை இலங்கைக்கு வழங்குவதற்காக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான இரகசியம் தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் கிடைக்கபெற்றதாக கூறி பொய்யான தகவலை பாரதிய ஜனதா கட்சி தெரிவிப்பதாக தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதனை தெரிவித்தார்.