எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரபாடா விலகல்

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

தென்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா. இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் (கால் தசையில் தொற்று) காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த நாடு திரும்பிவிட்டார். இதனால் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்திலும், 19-ந்தேதி நடைபெறும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல தொடரில் பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

ரபாடாவின் காயம் குறித்து மருத்து குழு மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருவதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ரபாடா இடம் பெறுவது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால், 15 பேர் கொண்ட அணியில் அவர் மட்டும்தான் கருப்பின வீரர் ஆவார். இது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணியின் கொள்கைப்படி ஆறு வெள்ளை நிற வீரர்களும், இரண்டு கருப்பு நிற வீரர்களும் இடம்பெற வேண்டும். ஆறு வெள்ளை நிற வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் கருப்பு நிற வீரர்களில் ரபாடா மட்டுமே இடம் பிடித்துள்ளதால் அவர் அனைத்து போட்டிகளிலும் களம் இறங்க வேண்டும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

லுங்கி நிகிடி ரிசர்வ் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அன்ரிச் நோர்ஜே, ஜெரால்டு கோயட்சி, மார்கோ யான்சன், ஓட்டினியல் பார்ட்மேன் ஆகி வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.