அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் புதிய அப்டேட்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளுக்கிடையே நடந்து வருகிறது. இதுவரை விடாமுயற்சி படத்தைக் குறித்து பெரிய அளவிளான எந்த அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார். இது ரசிகர்களை மீண்டும் உற்சாகம் அடையச் செய்தது.

விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தை வைத்து இயக்கும் குட் பேட் அக்லி படம் தாராமானதாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கூறிவருகின்றனர். இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது.

இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.