கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் வீழ்ச்சி – மத்திய வங்கி

முக்கிய செய்திகள் 2

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தை பதிவு செய்துள்ளன.

எனினும் இது பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் எடுத்துக் காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உற்பத்திக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2024 ஏப்ரலில் 42 சுட்டெண் பெறுமதியினைப் பதிவு செய்துள்ளது.

பருவகால போக்கின் பின்னர் உற்பத்தி நடவடிக்கைகளில் சுருக்கத்தை எடுத்துக் காட்டியுள்ளது.

இதேவேளை, பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 56.7 சுட்டெண் பெறுமதியை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.