திருடுவதற்கு வீட்டுக்குள் நுழைந்த திருடன் தவறி விழுந்து உயிரிழப்பு

முக்கிய செய்திகள் 1

அவிசாவளை உக்வத்தை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றிற்குள் (16) அதிகாலை நுழைந்த திருடன், வீட்டிலிருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்றை திருடி தப்பிச் செல்ல முயற்சித்த போது அதே வீட்டு வாசலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

வீட்டின் மதில் வழியாக வெளியேற முயற்சித்த சந்தர்ப்பத்தில், சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவிசாவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம், அவிசாவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.