சஜித் பிரேமதாசவிடன் சிறந்த தலைமைத்துவம் உள்ளது: மகேஷ் சேனாநாயக்க

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது. வீரவசனம் பேசுபவர்களால் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடன் சிறந்த தலைமைத்துவம் உள்ளது ஆகவே ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் நான் உட்பட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இணைந்துள்ளோம்.நாட்டின் தற்போதைய அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூக காரணிகளை கருத்திற் கொண்டு ஓய்வு பெற்ற இராணுவத்தினர் நாட்டுக்காக ஒன்றிணைய வேண்டும்.

இலங்கை இராணுவத்தில் சுமார் 35 ஆண்டுகாலம் சேவையாற்றிய இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்கள்.முன்னாள் இராணுவ தளபதி என்ற அடிப்படையில் நாட்டுக்காக மீண்டும் சேவையாற்றும் தனிப்பட்ட பொறுப்பு எனக்கு உண்டு.பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடு எதனை நோக்கிச் செல்கிறது என்பதை அவதானிக்க முடிகிறது.

அரசியல் ஸ்திரப்படுத்தல் ஊடாகவே பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும்.தற்போதைய அரசியல் களத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ளது.பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க ஐக்கிய மக்கள் சக்தியால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

சகல தரப்பினருடன் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டேன்.அக்காலப்பகுதியில் வெற்றிப் பெற்ற வேட்பாளர் தொடர்பில் மக்கள் மத்தியில் குறிப்பிட்டேன்,ஆனால் எமது கருத்துக்கு மதிப்பளிக்காமல் மக்கள் அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினார்கள்.2019 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானம் தவறு என்பதை 2022 ஆம் ஆண்டு மக்கள் திருத்திக் கொண்டார்கள்.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது.வீரவசனம் பேசுபவர்களால் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடன் சிறந்த தலைமைத்துவம் உள்ளது ஆகவே ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்றார்.

Trending Posts