ஹம்பேகமுவயில் 13,752 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பலுப்பிட்டிகன்த பிரதேசத்தில் 13,752  கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலம்பகேயார  பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 13,752  கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.