23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

முக்கிய செய்திகள் 2

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளமையினால் டெங்கு நோய்ப் பரவலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின்படி இந்த வருடத்தில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 5,057 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2,214 பேரும் களுத்துறையில் 1,244 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,879 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,458 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.