அதிகாரிகளிடம் கடவுச்சீட்டை ஒப்படைத்தார் டயானா கமகே

முக்கிய செய்திகள் 1

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளார்.

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்து உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

டயானா கமகே இலங்கைப் பிரஜை இல்லையென்பதால், அவர் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு பிரதம நீதவான் திலின கமகேவினால் கடந்த 9 ஆம் திகதி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது