கடும் மழையால் புத்தளம் பிரதேச தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில்!

முக்கிய செய்திகள் 2

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக புத்தளம் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் நேற்று (18) இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் புத்தளம் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளான கடையாக்குளம், தில்லையடி, ரத்மல்யாய, பாலாவி, குவைட் நகர் மற்றும் பல பிரதேசஙகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில் வீடுகளுக்கள் வெள்ள நீர் உற்புகுந்துள்ளமையினால் சுமார் 150ற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் சில குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் புத்தள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.