
பாராளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி நடந்த பாராளுமன்றக் குழுக்கூட்டத்திலேயே இப்புகாரைத் தெரிவித்தனர். மேலும், கட்டணம் வசூலிக்கப்படும் தொகைக்கு அல்லது போதுமான அளவு உணவை உண்ணக்கூடிய வகையில் வழங்கவும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, சுமார் இருபது பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் சிறிது காலமாக உணவு உண்பதைத் தவிர்த்து வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உணவு மற்றும் பானங்களுக்காக வருடாந்தம் சுமார் பன்னிரெண்டு கோடி ரூபாவை பாராளுமன்றம் செலவிடுவதாக பாராளுமன்ற நிதி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இதில் பெரும்பாலான பணம் பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவுக்காகவே செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.