வானிலை ஆய்வுத் துறையில் 11 இயந்திரங்களின் செயலிழப்பு!

முக்கிய செய்திகள் 2

வானிலை ஆய்வுத் துறையால் நிறுவப்பட்ட 38 தானியங்கி வானிலை அமைப்புகளில் 11 இயந்திரங்களின் ஆயுட்காலம் முடிவடைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன் ஜப்பானிய உதவியின் கீழ் 570 மில்லியன் ரூபா செலவில் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன

அதன்படி மஹஇலுப்பல்லம, வகொல்ல, செவனகல, பொலன்னறுவை, அரலகங்வில, பலாங்கொட, சிறிகடூர, அகுனுகொலபலஸ்ஸ, தெனிய, தவலம, குடவ ஆகிய இடங்களில் உள்ள 11 தானியங்கி வானிலை நிலையங்கள் கடந்த வருடம் (2023) ஜூலை மாதம் 11ஆம் திகதி செயலிழந்துள்ளதாகவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் 2019 மற்றும் 2021 க்கு இடையில் தானியங்கி வானிலை நிலையங்களில் பராமரிப்பு மேற்கொள்ளப்படாத 47 வழக்குகள் என்றும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தானியங்கி வானிலை அமைப்புகள் மூலம் வெப்பநிலை, ஈரப்பதம், மழைப்பொழிவு, காற்றின் வேகம் மற்றும் திசை, காற்று மற்றும் சூரிய கதிர்வீச்சு ஆகியவற்றை அளவிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது