இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்குமா?

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மீது குண்டுகள் வீசி போர்க்குற்றம் செய்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்திருந்தது. தென்ஆப்பிரிக்கா குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்து வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞரான கரிம் கான் கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளை பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாக எங்களுடைய அலுவலகத்தில் இருந்து தீவிர விசாரணை மேற்கொண்டோம். அப்போது ஹமாஸ் அமைப்பு மனிதகுலத்திற்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளோம்.

அதேபோல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியபோது மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. தன்னுடைய அலுவலத்தில் இருந்து நேரில் சென்று விசாரணை நடத்தினோம். அப்போது அதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளார்.

இதனால் ஹமாஸ் தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே, முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி, யாஹ்யா சின்வர் ஆகியோருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும்.

அதேபோல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

கரிம் கான் கோரிக்கையை ஏற்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்குமா? என்பது விசாரணைக்குப் பின் தெரியவரும்.